பிப்ரவரி 18th, 2011 க்கான தொகுப்பு

மாயா நிலையம் – 18

பிப்ரவரி 18, 2011

பதின்மூன்றாய்ப் பரிணமிக்கும் சுழியம் நானே!
இருபதின் பரிமாணப் பாய்ச்சல் நீயே!
நான் உன் மடங்காக
நீ என் மடங்காக
இருநூற்று அறுபதில் அடங்கும்
எல்லாம் பரிணாமப் பரிமாணப் பாய்ச்சல் தான்.

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 34

பிப்ரவரி 18, 2011

ஆதிமூல நாதவிந்துப் பாதம் இரண்டும்
வாசியோடு மேல்பதியும் போதம்

ஆதி மூலம் = First Source
நாதம் = The Word(ஆதியில் எல்லாமே வார்த்தையாய் இருந்தது – புனித யோவான்)
விந்து = Light(நானே உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறேன் – புனித யோவன்)
வாசி = மூச்சு(நானே மெய்வழி ஜீவனாயிருக்கிறேன் – புனித யோவான் – அதாவது மெய்யெனும் உடம்பின் வழியே ஓடும் உயிர்ப்பாய், மூச்சாய் நான் இருக்கிறேன்)

மூச்சை நாம் ஒவ்வொரு முறை உள்ளிழுக்கும் போதும், தேவனின் ஜீவனுள்ள வார்த்தையும்(ஓங்கார நாதம்), அவரது ஞான ஒளியும்(அருட்பெருஞ்ஜோதி) நம் சிர உச்சியில் ஆழப் பதிந்து, நம்மில் மெய்ஞ்ஞான போதத்தை ஏற்படுத்தும்! மூச்சை நாம் ஒவ்வொரு முறையும் வெளி விடும் போதும், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற அடிப்படையில் இந்த மெய்ஞ்ஞான போதத்தை நாம் ஞால முழுமையும் பகிர்கிறோம்! இறை ஒளி, இறை ஒலி, பரிசுத்த ஆவி(நம்ம மூச்சு தானுங்கோ!) இம்மூன்றின் இரசவாதம் நம்முள் பொங்கும் அமுதம், இந்த அமுதத்தின் திடப்படுதல் அதாவது உறைதல் நம் மெய்யாம் காயம், ஆக நம் மெய்யே திடமான காய கற்பம்! பரிசுத்த ஆவியை அதாவது நம் மூச்சை நமக்கு கவனிக்க நேரமில்லாத போது, இந்த ஞான வாக்கியமும் செவிடன் காதில் ஊதிய சங்கே! நம்ப முடியாத எளிமையாய் நான்மீக மெய்ஞ்ஞானம் இருக்கும் போது, அஞ்ஞான ஆன்மீக வியாபாரம் அமோகமாகத் தான் நடக்கும்!

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 18, 2011

220

அருளே அறிவாய் தயவே செயலாய்
அன்பே இயலாய் இரு

221

அன்பை நினைந்து கருணை பொங்கும்
நெஞ்சே நிலையாய் இரு

222

நெஞ்சம் நெகிழ அன்பைச் சுரந்து
எம்முள் நெருங்கி இரு