பிப்ரவரி 24th, 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 40

பிப்ரவரி 24, 2011

பொன்னணிகள் அலங்கரித்துக் கல்லுருக்குப் பூசைஏழை
மெய்யுருவின் பசிக்கில்லை சோறு

மெய்யெலாம் ஈரம்மிக கல்லுருமுன் ஓலமிட்டும்
நின்னகச் சாரந்தொடல் அரிது

நெஞ்செலாம் ஈரம்மிக மெய்உயிர்க்கும் வாசிதொட
நின்னகச் சாரந்தொடல் எளிது

(வாசி = மூச்சு, விஞ்ஞானம் பிராண வாயுவை-ஆக்சிஜன்-யும், கரியமில வாயுவையும் அறியும், மெய்ஞ்ஞானம் “சிவா” அவரின், அல்லாவின், பரமபிதாவின் அருட்தாரையை அறியும்!

வாசியில் வாழும் பரலோக வாசியை
வாசிக்க மாயும் மரணம்

மூச்சென்னும் இறைவனின் கொடையை மனிதர் நமக்கு மதிக்க மனமில்லை!

மூச்சே தாண்டா பேச்சு பேசியேஅது
வீணா னாலுயிர் போச்சு

இருதய அன்பை ஞாபகங் கொளல், மூச்சைக் கவனமாய்ப் போற்றுதல், இந்த இரண்டு படிகளை விரும்பி மேற்கொண்டால், எல்லாப் படிகளையுந் தாண்டலாம், நமக்கோ விருப்பம் அறவே இல்லை, எனவே தான் நமது இந்த அவ நிலை!)

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 24, 2011

244

நீயது வன்றி அயலென மயக்கும்
மாயமே நம்பிக் கெட்டாய்

245

கெட்டாய் ஆதி மூலத் துதித்தநின்
மெய்ம்மை கோட்டை விட்டாய்

246

மெய்ம்மை கோட்டை விட்டாய் நின்மெய்யைப்
பொய்த்தே போகச் செய்தாய்

247

நின்மெய்யைப் பொய்த்தே போகச் செய்தாய்
சுற்றும்பல் பிறவியில் உழன்றாய்

248

சுற்றும்பல் பிறவியில் உழன்றாய் சாகாமல்
நிற்கும்மெய்ஞ் ஞானமே மறந்தாய்